‘பேரழகன்’ இயக்குனரின் அடுத்த படம்!

‘பேரழகன்’ இயக்குனரின் அடுத்த படம்!

செய்திகள் 10-May-2014 1:46 PM IST VRC கருத்துக்கள்

சூர்யா, ஜோதிகா நடித்த ‘பேரழகன்’ படத்தை இயக்கியவர் சசிசங்கர். இவர் மலையாளத்தில் 15 படங்களுக்கும் மேல் இயக்கியுள்ளார். இவர் தமிழில் இயக்கியுள்ள இரண்டாவது படம் ’பகடை பகடை’.

இந்த படத்தில் திலீப்குமார் கதாநாயகனாக நடிக்கிறார்.இவர் குழந்தை நட்சத்திரமாக தமிழ், தெலுங்கு படங்களில் நடித்தவர். கதாநாயகியாக திவ்யாசிங் நடிக்கிறார். ரிச்சு என்ற புதுமுகம் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கும் திவ்யா சிங்கின் உடன் பிறந்த தங்கை என்பது குறிப்பிடத்தக்கது. அக்காவும் தங்கையும் ஒரே படத்தில் நடிக்கிறார்கள்.

‘பகடை பகடை’ படத்தின் கதை, திரைக்கதை, எழுதி இயக்கும் சசிசங்கர் படம் குறித்து பேசும்போது, ‘‘பணம் எப்படியெல்லாம் ஒருவன் வாழ்க்கையில் விளையாடுகிறது என்பதை காதல் மற்றும் அக்‌ஷன் கலந்து சொல்லி இருக்கிறோம். பகடைக்காய் மாதிரி பணம் எப்படியெல்லாம் ஆட்டிப் படைக்கிறது இது தான் படத்தின் மையக் கரு’’ என்றார். இந்தப் படத்தை ‘வி.ஆர்.டி.டி.ஆர்ட்ஸ் ஃபிலிம்ஸ் மற்றும் விஸ்டம் பிலிம்ஸ் பிரைவெட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நாச்சியார் - டீசர்


;