நடிகர் ஜெயபிரகாஷ் மகன்கள் நடிக்கும் படம்!

நடிகர் ஜெயபிரகாஷ் மகன்கள் நடிக்கும் படம்!

செய்திகள் 10-May-2014 12:58 PM IST VRC கருத்துக்கள்

சுபசெந்தில் பிக்சர்ஸ் என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கும் 'ஐவராட்டம்' என்ற படத்தின் மூலம் நடிகர் ஜெயபிரகாஷின் மகன்கள் நிரஞ்சன் ஜெயபிரகாஷ், துஷ்யந்த் ஜெயபிரகாஷ் இருவரும் நடிகர்களாக அறிமுகமாகிறார்கள். இவர்களுடன் முக்கிய வேடத்தில் ஜெயபிரகாஷும் நடிக்கும் இப்படத்தினை மிதுன் மாணிக்கம் இயக்குகிறார். கதாநாயகியாக நித்யாஷெட்டி நடிக்கிறார்.

இப்பம் குறித்து மிதுன் மாணிக்கம் கூறும்போது, ‘‘சிவகங்கை மாவட்டத்தில் ஐந்து பேர் மட்டும் விளையாடும் கால்பந்தாட்டம் பற்றிய கதை இது. வேறு எந்த இடத்திலும் இந்த விளையாட்டை விளையாட அரங்கம் இல்லை. இதற்கான அரங்கு சிவகங்கையில் மட்டும் தான் இருக்கிறது. அண்ணன் தம்பிகளுக்குள் ஏற்படும் பிரச்சனை, மற்றும் காதல், குடும்ப சென்டிமென்டை உள்ளடக்கிய கதை இது. விளையாட்டை மையப்படுத்தி இப்போது நிறைய படங்கள் வருகிறது. சினிமாவின் மூலம் இளைஞர்களை உற்சாகப்படுத்தி விளையாட்டை ஊக்குவிக்கும் முயற்சி இப்போது அதிகமாகி விட்டது.அந்த புதிய முயற்சியில் நாங்களும் இறங்கி இருக்கிறோம்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

லென்ஸ் - டிரைலர்


;