‘சிங்கிள் டிராக்’குடன் வரும் பார்த்திபன்!

‘சிங்கிள் டிராக்’குடன் வரும் பார்த்திபன்!

செய்திகள் 9-May-2014 5:40 PM IST VRC கருத்துக்கள்

ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு ஆர்.பார்த்திபன் இயக்கி வரும் படம் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’. எதையும் வித்தியாசமாக செய்யும் பார்த்திபன், இப்படத்தை ‘கதை இல்லாத சினிமா’ என்ற அடைமொழியுடன் வித்தியாசமான முறையில் உருவாக்கி வருகிறார். இப்படத்தில் தமிழ் சினிமாவின் பல பிரபலங்கள் நடிக்க, படத்தின் படப்பிடிப்பு முடியும் கட்டத்தில் இருக்கிறது. இப்படத்தின் சிங்கிள் டிராக் ஒன்றை வருகிற 12-ஆம் தேதி சூர்யன் பண்பலையில் வெளியிடவிருக்கிறார் பார்த்திபன். இதனை தொடர்ந்து மீதி பாடல்களின் வெளியீட்டு விழாவை வருகிற 25-ஆம் தேதி சென்னை சத்யம் தியேட்டரில் நடத்தத் திட்டமிட்டுள்ளார். இந்த படத்திற்கு அல்போன்ஸ் ஜோசப் இசை அமைத்திருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பாஸ்கர் ஒரு ராஸ்கல் - teesar


;