மீண்டும் நிகழுமா ‘கும்கி’ மேஜிக்?

மீண்டும் நிகழுமா ‘கும்கி’ மேஜிக்?

செய்திகள் 9-May-2014 11:36 AM IST VRC கருத்துக்கள்

‘கும்கி’, ‘இவன் வேற மாதிரி’ படங்களை தொடர்ந்து ‘அரிமா நம்பி’, ‘தலப்பாக்கட்டி’ என பல படங்களை கையில் வைத்துக்கொண்டு படு பிசியாக நடித்து வரும் விக்ரம் பிரபு அடுத்து, எழில் இயக்கும் ஒரு படத்திலும் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்க, டி.இமான் இசை அமைக்கிறார். டி.இமான் - விக்ரம் பிரபு இணைந்த ‘கும்கி’ படம் ஹிட் ஆகியதோடு இப்படத்தின் பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது. அது மாதிரி எழில் – டி.இமான் இணைந்த ‘மனம் கொத்தி பறவை’ படத்தின் பாடல்களும் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை தொடர்ந்து எழிலும், டி.இமானும் மீண்டும் இணைந்துள்ள இப்படத்திற்கான ஒரு பாடலை பதிவு செய்து விட்டார் டி.இமான். விக்ரம் பிரபு, டி.இமான் மீண்டும் இணைந்துள்ள இப்படத்தின் பாடல்கள் ’கும்கி’ பாடல்கள் மாதிரி ஹிட் ஆகுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

விஸ்வாசம் ட்ரைலர்


;