ஏ.ஆர்.ரஹ்மான் 3 மாத காலம் செதுக்கிய பாடல்!

ஏ.ஆர்.ரஹ்மான் 3 மாத காலம் செதுக்கிய பாடல்!

செய்திகள் 9-May-2014 11:07 AM IST VRC கருத்துக்கள்

’அரவான்’ படத்தை தொடர்ந்து வசந்தபாலன் இயக்கி வரும் ‘காவியத்தலைவன்’ படத்தின் படப்பிடிப்பு இந்த மாத கடைசியுடன் முடிந்து விடுமாம்! சித்தார்த், ப்ருத்திவிராஜ், வேதிகா, அனைகா முதலானோர் நடித்து வரும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். வசந்தபாலன் இயக்கத்தில் முதன் முதலாக இசை அமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான், படத்தின் பெரும்பாலான பாடல்களை ஏற்கெனவே உருவாக்கி கொடுத்த நிலையில் ஒரு பாடலை மட்டும் பாக்கி வைத்திருந்தார்! இப்போது அந்த பாடலையும் கொடுத்து விட்டாராம். இந்தப் பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் கிட்டத்தட்ட மூன்று மாத காலம் அவகாசம் எடுத்துக் கொண்டு இசை அமைக்க, இப்பாடல் சூப்பராக வந்திருப்பதாக இயக்குனர் வசந்த பாலன் தெரிவித்திருக்கிறார். இந்தப் பாடல் காட்சியின் படப்பிடிப்பு விரைவில் நடக்கவிருக்கிறது. இப்பாடல் படப்பிடிப்புடன் மொத்த படமும் முடிந்துவிடுமாம்! அதன் பிறகு படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள், ஆடியோ, டிரைலர் வெளியீட்டு என வேலைகள் விறுவிறுப்பாக நடந்து படம் விரைவில் ரிலீசாகவிருக்கிறது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்சல் - பாடல் வீடியோ


;