பாலா, மிஷ்கின் இணையும் பிசாசு!

பாலா, மிஷ்கின் இணையும் பிசாசு!

செய்திகள் 9-May-2014 10:12 AM IST VRC கருத்துக்கள்

தனது ‘பி ஸ்டுடியோஸ்’ நிறுவனம் மூலம் பல தரமான படங்களை தமிழ் சினிமாவுக்கு வழங்கியவர் இயக்குனர் பாலா. தற்போது சசிகுமார் - வரலட்சுமி சரத்குமார் நடிப்பில், ‘தாரை தப்பட்டை’ படத்தை இயக்கி வரும் பாலா, தனது ‘பி ஸ்டுடியோ’ பேனர் மூலம் மிஷ்கின் இயக்கத்தில் ஒரு படத்தை தயாரிக்கிறார். தான் இயக்கும் ஓவ்வொரு படத்திற்கும் வித்தியாசமான பெயர்களை வைத்து வரும் மிஷ்கின் இந்தப் படத்திற்கு ‘பிசாசு என்று பெயர் வைத்திருக்கிறார். அமானுஷ்ய சக்தியை பின்னணியாக வைத்து உருவாக்கப்படும் படமாம் இது! பரவலாக பேசப்பட்ட ‘ஓ நாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்திற்கு பிறகு மிஷ்கின் இயக்கும் இப்படத்தின் பூஜை வருகிற 14 -ஆம் தேதி சென்னையில் நடைபெறவிருக்கிறது. இந்தப் படத்திற்கான நடிகர் - நடிகைகள் மற்றும் தொழில்நுப்டப கலைஞ்ரகளின் தேர்வு நடந்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஹர ஹர மஹாதேவகி - டிரைலர்


;