‘ஜிகர்தண்டா’ எப்போது வெளியாகும்?

‘ஜிகர்தண்டா’ எப்போது வெளியாகும்?

செய்திகள் 8-May-2014 5:36 PM IST VRC கருத்துக்கள்

’பீட்சா’ படத்தின் அதிரி புதிரி வெற்றியை தொடர்ந்து, கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கும் படம் ’ஜிகர்தண்டா’. சித்தார்த், லட்சுமி மேனன் ஜோடியாக நடித்துள்ள இப்படத்தை இம்மாதம் 23-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர்! ஆனால் நாளை (9-5-2014) ரிலீசாகவிருந்த ரஜினியின் ‘கோச்சடையான்’ படத்தின் வெளியீட்டை இம்மாதம் 23-ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளதால் ‘ஜிகர்தண்டா’ படத்தை ‘கோச்சடையான்’ பட வெளியீட்டுக்கு முன்னதாகவோ அல்லது ‘கோச்சடையான்’ பட வெளியீட்டுக்குப் பிறகு ஒரு சில தினங்கள் கழித்தோ வெளியிடுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

இந்நிலையில், சென்சருக்கு சென்ற ‘ஜிகர்தண்டா படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள். கோலிவுட்டின் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் படங்களில் ‘ஜிகர்தண்டா’வும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மேயாத மான் - தங்கச்சி பாடல் வீடியோ


;