சி.வி.குமார் தயாரிப்பில் கௌதம் மேனன் உதவியாளர்!

சி.வி.குமார் தயாரிப்பில் கௌதம் மேனன் உதவியாளர்!

செய்திகள் 8-May-2014 3:59 PM IST VRC கருத்துக்கள்

ரிலீசுக்கு ரெடியாகியிருக்கும் ‘முண்டாசுப்பட்டி’ படத்தை தொடர்ந்து ‘திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட்’ நிறுவனம் சார்பில் சி.வி,குமார் தயாரித்து வரும் படம் ‘சரபம்’. இப்படத்தை கௌதம் மேனனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த அருண் மோகன் இயக்கி வருகிறார். இவர் காமெடி மற்றும் குணச்சித்திர நடிகர் அனுமோகனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நவீன்சந்திரா, சலோனி ஜோடியாக நடிக்க, ‘ஆடுகளம்’ நரேன் முக்கியமான ஒரு கேரக்டரில் நடிக்கிறார். இப்படத்தின் ஒளிப்பதிவை கிருஷ்ணன் வசந்த் கவனிக்க, பிரிட்டோ மைக்கேல் இசை அமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடியும் கட்டத்தில் இருக்கிறது. இப்படத்தை ஜூன் மாதம் வெளியிட திட்டமிட்டிருக்கிறார் சி.வி.குமார்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அதே கண்கள் - டீசர்


;