விஜய் ரசிகர்களுக்கு டபுள் டிரீட்!

விஜய் ரசிகர்களுக்கு டபுள் டிரீட்!

செய்திகள் 8-May-2014 2:47 PM IST VRC கருத்துக்கள்

ஏ.அர்.முருகதாஸ், விஜய் இணைந்த ‘துப்பாக்கி’ திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனதை தொடர்ந்து இவர்கள் மீண்டும் இணைந்துள்ள ‘கத்தி’ மீது இப்போதே எக்கச்சக்க எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது! விஜய் இரண்டு வேடங்களில் நடித்து வரும் இப்படம் தீபாவளி வெளியீடாக திரைக்கு வரவிருக்கிறது. இதனால் இப்படத்தின் படப்பிடிப்பை மேலும் துரிதப்படுத்தியுள்ளனர்! இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய்யின் பிறாந்த நாளான ஜூன் 22-ஆம் தேதி வெளியிட்டு, விஜய் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் தர இருக்கிறார்கள் படக்குழுவினர்! இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்க, வில்லனாக நீல் நித்தின் முகேஷ் நடிக்கிறார். விஜய் நடிப்பில் அனிருத் இசை அமைக்கும் முதல் படம் இது என்பதோடு, மிகப் பிரம்மாண்டமான முறையில் உருவாகி வரும் படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கூட்டாளி - டிரைலர்


;