‘சத்யஜோதி ஃபிலிம்ஸ்’ தயாரிப்பில் கௌதம் கார்த்திக்

‘சத்யஜோதி ஃபிலிம்ஸ்’ தயாரிப்பில் கௌதம் கார்த்திக்

செய்திகள் 8-May-2014 12:29 PM IST VRC கருத்துக்கள்

மணிரத்னம் இயக்கிய ‘கடல்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். ‘கடல்’ கௌதம் கார்த்திக்குக்கு சொல்லும் படியான வெற்றிப் படமாக அமையவில்லை என்றாலும், இப்படம் மூலம் அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் கிடைத்தது. சமீபத்தில் வெளியான ‘ என்னமோ ஏதோ’ மற்றும் தற்போது தயாரிப்பில் இருக்கும் ‘சிப்பாய்’, ‘வை ராஜா வை’, ‘இந்திரஜித்’, ‘நானும் ரௌடிதான்’ என பல படங்களின் ஹீரோ கௌதம் கார்த்திக் தான்! இந்தப் படங்கள் தவிர கௌதம் கார்த்திக் அடுத்து ‘சத்யஜோதி ஃபிலிம்ஸ்’ தயாரிக்கும் ஒரு படத்திலும் ஹீரோவாக நடிக்க கமிட் ஆகியிருக்கிறார். சத்யஜோஜி ஃபிலிம்ஸ், கௌதம் கார்த்திக்கின் தந்தை கார்த்திக் நடித்த ‘கிழக்கு வாசல்’ போன்ற பல வெற்றிப் படங்களை தயாரித்த நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசின் அசிஸ்டென்ட் ராஜ்குமார் இயக்குகிறார். இப்படம் சம்பந்தமான மற்ற விவரங்கள் விரைவில் தெரிய வரும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இருட்டு அறையில் முரட்டு குத்து - பார்ட்டி பாடல்


;