நட்பை சொல்லும் கப்பல்!

நட்பை சொல்லும் கப்பல்!

செய்திகள் 8-May-2014 11:28 AM IST VRC கருத்துக்கள்

தமிழ் சினிமாவில் தாய் பாசம் , காதலை தொடர்ந்து அதிக அளவில் படமாக்கப்பட்ட கதைகள் நட்பு பற்றியதுதான் என்று சொல்லலாம். அந்த வகையில் தற்போது தயாராகி வரும் 'கப்பல்' என்ற படத்தின் மைய அம்சம் நட்புதான்! ‘ ஐ ஸ்டுடியோஸ்’ எனும் புதிய பட நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை இயக்குனர் ஷங்கரிடம் பாடம் பயின்ற கார்த்திக் ஜி கிருஷ் இயக்குகிறார். ‘கப்பல்’ குறித்து கார்த்திக் கூறும்போது,

‘‘நட்பு எல்லோரையும் கவரும் அம்சமாகும். வீட்டுக்கு ஒரு பிள்ளை என்ற இந்த காலகட்டத்தில் நட்பு மட்டுமே ஒரு பிள்ளையின் குணாதிசயத்தை , வளர்ந்த பின்னரும் தீர்மானிக்கிறது. தனக்கு மட்டுமே உரியவர் என்ற மனப்பான்மை எல்லா உறவிலும் தழைத்தாலும் , நட்பில் அந்த உணர்வு மேலிடும்போது வரும் பிரச்சினையை விவாதிக்கும் படம் தான் 'கப்பல்'. வைபவ் என்னுடைய கதையின் நாயகன் பாத்திரத்துக்கு பொருத்தமாக இருந்தார். ‘மங்காத்தா’ படத்தில் வைபவை பார்த்தபோதே இதை உறுதி செய்து விட்டேன். சோனம் பரீத் பஜ்வா நாயகியாக அறிமுகம் ஆகிறார். 'கப்பல்' சிரிப்புக்கும்,சந்தோஷத்துக்கும் உத்திரவாதம் அளிக்கும் படமாகும். வி.டி.வி. கணேஷ், கருணாகாரன், அர்ஜுன் நந்தகுமார் மற்றும் ரோபோ ஷங்கர் நகைசுவை பயணத்துக்கு பெரிதும் உதபுவர்கள். ‘சூது கவ்வும்’, ‘தெகிடி’ ஆகிய படங்களில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த தினேஷ் கிருஷ்ணன் ,'மூடர் கூடம் ' படத்தில் இசை அமைப்பாளராக பணியாற்றிய நடராசன் ஷங்கர், 'கல்யாண சமையல் சாதம்' படத்தில் கலை இயக்குனராக பணியாற்றிய ஆறுசாமி, பல்வேறு வெற்றி படங்களின் பட தொகுப்பாளரான ஆன்டனி, பாடலாசிரியர்களாக கார்க்கி, கபிலன், நடன இயக்குனராக தினேஷ் என்று இப்படத்தில் நிறைய திறமைசாலிகள் இணைந்திருக்கிறார்கள். ’கப்பல்’ மிகப் பெரிய வெற்றிப் படமாக அமையும்’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மேயாத மான் - ட்ரைலர்


;