’கோச்சடையான்’ பட புதிய ரிலீஸ் தேதி!

’கோச்சடையான்’ பட புதிய ரிலீஸ் தேதி!

செய்திகள் 8-May-2014 10:56 AM IST VRC கருத்துக்கள்

ரஜினிகாந்தின் ‘கோச்சடையான்’ படம் நாளை ரிலீசாகவிருந்த நிலையில், சில தவிர்க்க முடியாத காரணங்களால் படத்தின் வெளியீட்டை திடீரென்று தள்ளி வைத்திருக்கிறார்கள். இது சம்பந்தமாக இப்படத்தை தயாரித்திருக்கும் ‘ஈராஸ்’ நிறுவனம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில், ‘‘கோச்சடையான்’ படம் உயர் தொழில்நுட்பத்தில் தயாராகியுள்ள பிரம்மாண்ட படம். சர்வதேச புகழ்பெற்ற படங்களான ‘வேர்ல்ட் வார் 2’, ‘பைரேட்ஸ் ஆஃப் கரீபியின்’, ‘அயன்மேன் 2’, ‘ஹாரிபாட்டர்’ போன்ற படங்களில் வேலை செய்த தொழில்நுட்ப கலைஞர்கள் ‘கோச்ச்டையான்’ படத்தில் வேலை செய்துள்ளனர். இந்தப் படத்தின் சில முக்கியமான தொழில்நுட்ப வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த வேலைகள் திட்டமிட்டபடி முடியாததால் மே-9 ஆம் தேதி, ரிலீசாக வேண்டிய ‘கோச்சடையான்’ படத்தை மே 23-ஆம் தேதிக்கு ரிலீஸ் தள்ளி போடப்படிருக்கிறது. தவிரக்க முடியாத தொழில்நுட்ப காரணங்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வருகிற 23-ஆம் தேதி உலகம் முழுக்க ‘கோச்ச்டையான்’ பிரம்மாண்டமான முறையில் வெளியாகும்’’ இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

2.௦ மேக்கிங் வீடியோ - பார்ட் II


;