சக்சஸ் கம்பெனியிடம் சந்தானம் படம்

சந்தானம் படத்தை வாங்கிய ஸ்டுடியோ கிரீன்!

செய்திகள் 8-May-2014 10:32 AM IST VRC கருத்துக்கள்

’கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’. பல படங்களில் நடித்தவரும், ஏற்கெனவே ‘முத்திரை’ என்ற படத்தை இயக்கியவருமான ஸ்ரீநாத் இயக்கியிருக்கும் இப்படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக ஆஷ்னா சவேரி நடித்திருக்க, ‘மிர்ச்சி’ செந்திலும் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். பி.வி.பி. சினிமா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசை அமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்றுள்ள நிலையில் நேற்று இப்படம் தணிக்கையானது! தணிக்கைக் குழுவினர் படத்திற்கு ‘யு’ சர்டிஃபிகெட் வழங்கியிருக்கிறார்கள். ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தின் வெற்றியை தொடர்ந்து சந்தானம் மீண்டும் ஹீரோவாக நடித்துள்ள படம் இது என்பதால் இப்படத்தின் மீது கோலிவுட்டில் பெரும் எதிர்பர்ப்பு இருந்து வருகிறது. இந்தப் படத்தை தமிழகம் முழுக்க வெளியிடும் உரிமையை கே.ஈ.ஞானவேல் ராஜாவின் ’ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் பெற்றுள்ளது! பல வெற்றிப் படங்களை தயாரித்துள்ள இந்நிறுவனம் ஏற்கெனவே பல படங்களை வாங்கி வெளியிட்டு வெற்றியும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ’வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்தை மே 10-ஆம் தேதி வெளியிட இருக்கிறது ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம்! ‘அட்டக்கத்தி’, ‘சூதுகவ்வும்’, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘கும்கி’ படங்களின் வரிசையில் இப்படமும் மாபெரும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தில்லுக்கு துட்டு - டிரைலர்


;