'எட்டுத்திக்கும் மதயானை’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ்!

'எட்டுத்திக்கும் மதயானை’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ்!

செய்திகள் 7-May-2014 4:43 PM IST Inian கருத்துக்கள்

‘ராட்டினம்’ படத்தை இயக்கிய கே.எஸ். தங்கசாமி, தனது ‘ராட்டினம் பிக்சர்ஸ்’ மூலம் இயக்கி, தயாரித்துள்ள படம் 'எட்டுத்திக்கும் மதயானை'. இப்படத்தில் ஆர்யாவின் தம்பி சத்யா, ஸ்ரீமுகி இணைந்து நடித்துள்ளனர். 'காவல் துறை'ங்கிறது பொறுப்பு, அது அதிகாரம் இல்லை, அது அதிகாரமா மாறும்போது தான் எல்லா விஷயமும் தப்பாயிடுது' எனும் ஒரு வரியை வைத்துக்கொண்டு பரபரப்பான திரைக்கதை அமைத்துள்ளாராம் இயக்குனர் தங்கசாமி! அத்துடன் இவர் படத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். சமீபத்தில் தணிக்கைக்குச் சென்ற இப்படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

கே.எஸ் தங்கசாமி இயக்கிய ‘ராட்டினம்’ படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் கௌதம் மேனன், ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தை கிராமத்து பின்னணியில் எடுத்திருப்பது போல் உள்ளது’ என்று அப்போது பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எனக்கு பட்டங்கள் பிடிக்காது - ரகுல் ப்ரீத்


;