ரஜினிக்காக உருவாகும் பிரம்மாண்டம்!

ரஜினிக்காக உருவாகும் பிரம்மாண்டம்!

செய்திகள் 7-May-2014 3:47 PM IST VRC கருத்துக்கள்

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ’லிங்கா’ படம் மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாக இருக்கிறது! இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் மைசூரில் துவங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தப் படத்திற்காக மிகப் பிரம்மாண்டமான செட் ஒன்றை அமைக்க இருக்கிறார்கள்! ரஜினி நடித்த ‘எந்திரன்’ படத்தில் கலை இயக்குனராக பணியாற்றிய சாபு சிரில் தான் இப்படத்திலும் கலை இயக்குனராக பணிபுரிகிறார்! நான்கு முறை சிறந்த கலை இயக்குனருக்கான தேசிய விருது பெற்ற சாபு சிரில் கை வண்ணத்தில் உருவாக இருக்கும் ‘லிங்கா’ பட செட், தமிழ் சினிமாவிலேயே அதிக பொருட் செலவில் தயாராகும் அதிப் பிரம்மாண்டமான ‘செட்’டாக இருக்கும் என்கிறார்கள்! இப்படத்தை கன்னட திரையுலகின் மிகப் பெரிய தயாரிப்பாளரும், தொழிலதிபருமான ‘ராக்லைன்’ வெங்கடேஷ் தயாரிக்க, இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சோனாக்‌ஷி சின்ஹா, அனுஷ்கா ஆகியோர் நடிக்கிறார்கள் என்பதும், இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார் என்பதும் ஏற்கெனவே எல்லோருக்கும் தெரிந்த செய்திகளாகும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பாகமதி - டிரைலர்


;