கனவு நிறைவேறிய பொன்னாள்!

கனவு நிறைவேறிய பொன்னாள்!

செய்திகள் 7-May-2014 11:52 AM IST VRC கருத்துக்கள்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள ஒரு அறிக்கையின் விவரம் வருமாறு…

‘‘இன்று 6-5-2014 தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களின் நீண்ட நாளைய கனவு நிறைவேறிய ஒரு பொன்னாள்.. மாதந்தோறும் அவர்கள் வங்கி கணக்கில் ரூ10,000/- சேர்ந்துக் கொண்டேயிருக்கும் திட்டம் தொடங்கிய நன்னாள்.. தலைவர் கே.ஆர். அவர்களின் தலைமையிலான நிர்வாகம் கேபிள் டி.வி. மூலம், தயாரிப்பாளர்களின் திரைப்படங்களின் பாடல்கள், நகைச்சுவை காட்சிகள், முன்னோட்டம் மற்றும் விழாக்கள் போன்றவைகளை ஒளிபரப்பும் உரிமையை வழங்குவதன் மூலம் பெரும் தொகை கிடைப்பதை அறிந்தனர்.. இத்தனை ஆண்டுகளாக சிலர் தயாரிப்பாளர்களுக்கு சேர வேண்டிய பங்கை மறைத்து, தராமல் ஏமாற்றி விட்டனர். இந்த நயவஞ்சக கொள்ளையர்களின் துரோக செயலால் பல தயாரிப்பாளர்கள் தங்கள் சொத்துக்களை இழந்து பலவகையிலும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் கஷ்டங்களை போக்கும் விதமாக அவர்களுக்கு மட்டுமில்லாமல் அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் எந்தவித பாகுபாடுமின்றி வங்கியில் கணக்கு ஒன்றை அவர்கள் பெயரிலே தொடங்கி அதில் மாதந்தோறும் ரூ.10,000/- சேரும்படி ஒரு திட்டத்தை தொடங்கிவிட்டார்கள்..

தயாரிப்பாளர்களை மயக்க, சொல்லப்பட்ட ஒரு கவர்ச்சியான பேச்சல்ல இந்த திட்டம் என்பதை இன்று செயல்படுத்தி காட்டியதன் மூலம் தயாரிப்பாளர்களின் மேல் இவர்கள் கொண்டுள்ள அக்கறையை தெள்ளத் தெளிவாக காட்டிவிட்டார்கள்.. இன்று மட்டும் ஏறத்தாழ நூற்றுக்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்களுக்கு வங்கி கணக்கை தொடங்கி அவர்களுக்கு வங்கியின் செக்புக், கிரெடிட் கார்ட் முதலியவற்றை தலைவர் கே.ஆர். அவர்கள் வழங்கினார். செயலாளர் கே.ஈ.ஞானவேல் ராஜா உடன் இருந்தார். அனைத்தையும் பெற்றுக்கொண்டு, பல ஆண்டுகளுக்கு பிறகு எங்கள் நிலையறிந்து எங்கள் வாழ்வை உயர்த்த வந்த நல்லவர்கள் வாழ்க என்று அவர்கள் மனமாற வாழ்த்தி சென்றது உடன் இருந்த அனைவரையும் மகிழ்ச்சியில் திக்கு முக்காட வைத்தது. இன்னும் பல நல்ல திட்டங்களை நிறைவேற்ற ஆதரவு கிடைத்த நம்பிக்கையை நிர்வாகிகளிடையே ஏற்படுத்தியது’’ என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;