மீண்டும் இணையும் வெற்றிக் கூட்டணி!

மீண்டும் இணையும் வெற்றிக் கூட்டணி!

செய்திகள் 7-May-2014 11:33 AM IST VRC கருத்துக்கள்

சரத்குமார் நடித்த ‘மகாபிரபு’, ‘ஏய்’, ‘சாணக்யா’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கியவர் ஏ.வெங்கடேஷ். 'சென்னையில் ஒரு நாள்', 'புலிவால்' போன்ற வெற்றிப் படங்களைத் தயாரித்த ‘மேஜிக் பிரேம்ஸ்’ பட நிறுவனம், தற்போது சரத்குமார் இரு வித்தியாசமான வேடங்களில் நடிக்கும் 'சண்டமாருதம்' என்ற படத்தை மிகப் பிரமாண்டமாக தயாரிக்க உள்ளது.

“எதிரியை எதிரியா பார்த்து பழக்கமில்லை எனக்கு, எரிச்சித்தான் பழக்கம்” என்கிற கொள்கையுடைய அழுத்தமான வில்லன் கதாபாத்திரம் ஏற்கிறார் சரத்குமார். புயல், சுனாமி போன்றவற்றையும் தாண்டி அசுர வேகத்துடன் வீசும் காற்றுக்கு சண்டமாருதம் என்றுபெயர். எவ்வளவு பெரிய தடைகளையும் உடைத்துவிடும் ஆற்றல் அப்பெரும் காற்றுக்கு உண்டு. அதே மாதிரி தான் சரத்குமார் ஏற்று நடிக்கும் கதாபாத்திரம். எவ்வளவு பெரிய தடை வந்தாலும் உடைத்தெறியும். இந்தக் கதைக்கு இப்பெயர் பொருத்தமாக இருப்பதால் ‘சண்டமாருதம்’ என்று பெயர் சூட்டி இருக்கிறோம். படத்தின் மற்ற முக்கிய வேடங்களில் ராதிகா சரத்குமார், சமுத்திரகனி நடிக்கின்றனர். இப்படத்திற்கு சரத்குமார் கதை எழுத, திரைக்கதை வசனம் எழுதுகிறார் ‘கிரைம்’ கதை மன்னன் ராஜேஷ் குமார். மே 14-ஆம் தேதி படப்பிடிப்பு துவங்கி, ஆகஸ்ட் மாதம் திரைக்கு வர உள்ளது ‘சண்டமாருதம்’’ என்கிறார் இயக்குனர் வெங்கடேஷ்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எச்சரிக்கை - டிரைலர்


;