இஸ்ரேலுக்கு செல்கிறார் பிரபு சாலமன் !

இஸ்ரேலுக்கு செல்கிறார் பிரபு சாலமன் !

செய்திகள் 7-May-2014 11:25 AM IST VRC கருத்துக்கள்

பிரபுசாலமன் இயக்கும் 'கயல்' படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்ததையொட்டி பிரபுசாலமன் தனது குடும்பத்தாருடன் இஸ்ரேலுக்கு பயணமாகிறார். இயேசு பிறந்த ஊரான இஸ்ரேல் பயணம் பிரபு சால்மனின் வாழ்நாள் கனவாம்! அது இப்போது தான் கை கூடியுள்ளதாம்! அதற்காக நாளை சென்னையிலிருந்து குடும்பத்தாருடன் இஸ்ரேல் செல்கிறார் பிரபு சாலமன்.

இயேசு பிறந்த இடமான பெத்தலகாம், அவர் வளர்ந்த இடமான நாசரேத், சிலுவையில் அறையப்பட்ட கொல்கத்தா மலை, ஞானஸ்தானம் பெற்ற ஜோடான் நதி,பத்து கட்டளைகள் பெற்ற சீனாஸ் மலை போன்ற இடங்களில் பிரார்த்தனைகளை முடித்து விட்டு பதினேழாம் தேதி சென்னை திரும்புகிறார். பிரபு சாலமனுடன் 60 பேர் கொண்ட நண்பர்கள் குழுவும் இஸ்ரேல் செல்கிறது. இன்று பிரபுசாலமனுக்கு பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

துப்பறிவாளன் - மேக்கிங் வீடியோ


;