மகேந்திரனுடன் கை கோர்க்கும் பிரகாஷ் ராஜ்!

மகேந்திரனுடன் கை கோர்க்கும் பிரகாஷ் ராஜ்!

செய்திகள் 6-May-2014 2:46 PM IST VRC கருத்துக்கள்

‘முள்ளும் மலரும்’, ‘உதிரிப்பூக்கள்’, ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’, ‘மெட்டி’ என பல ஹிட் படங்களை இயக்கியவர் மகேந்திரன். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த படம் ‘சாசனம்’. அரவிந்தசாமி, கௌதமி ஜோடியாக நடித்த இப்படம் 2006-ல் வெளியானது. இந்தப் படத்தை தொடர்ந்து நீண்ட ஒரு இடைவெளி விட்ட இயக்குனர் மகேந்திரன் தற்போது மீண்டும் ஒரு படத்தை இயக்கவிருக்கிறார். 1980-களில் இசை அமைப்பாளர் இளையராஜாவுடன் இணைந்து ஏராளமான ஹிட் பாடல்களை தந்த மகேந்திரன், இந்தப் படத்திலும் இளையராஜாவுடன் இணைகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்திற்கான பாடல் கம்போசிங் சமீபத்தில் சென்னையில் நடந்தது. முற்றிலும் புதுமுகங்களை நடிக்க வைத்து மகேந்திரன் இயக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாகவுள்ளது. தற்போது இளையராஜா இசையில், ’உன் சமையல் அறையில்’ படத்தை இயக்கி, தயாரித்து, நடித்து வரும் பிரகாஷ் ராஜ் தான் மகேந்திரன் இயக்கும் படத்தையும் தயாரிக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

களவாடிய பொழுதுகள் - டிரைலர்


;