அஜித் படத்தின் தலைப்பு?

அஜித் படத்தின் தலைப்பு?

செய்திகள் 6-May-2014 12:42 PM IST Top 10 கருத்துக்கள்

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன் துவங்கிவிட்டது அல்லவா? அஜித்தின் 55-வது படமாக அமைந்துள்ள இப்படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை! ’ஸ்ரீ சத்யசாய் மூவிஸ்’ நிறுவனம் சார்பில் ஏ.எம்.ரத்னம் தயாரித்து, விஷ்ணுவர்தன் இயக்கிய அஜித்தின் ‘ஆரம்பம்’ படத்தின் தலைப்பைக் கூட கடைசி நேரத்தில் தான் அறிவித்தார்கள்! அதே நிறுவனம் தான் கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் இப்படத்தையும் தயாரிக்கிறது. இதனால் பட டைட்டில் வைக்காமலேயே விளம்பரத்தை தேடிக்கொண்ட ’ஆரம்பம்’ பத்தின் ஸ்டைலையே இப்படத்திலும் கடை பிடிப்பார்களோ என்ற ஒரு எண்ணம் ரசிகர்களுக்கு மத்தியில் இருந்து வர, இன்னொரு பக்கம் இந்தப் படத்தில் அஜித் நடிக்கும் ஒரு கேரக்டர் பெயர் சத்யதேவ் என்றும், இந்த பெயரையே படத்திற்கு தலைப்பாக வைக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

விவேகம் - டிரைலர்


;