சூப்பர்ஸ்டாரின் புதிய சாதனை!

சூப்பர்ஸ்டாரின் புதிய சாதனை!

செய்திகள் 6-May-2014 11:55 AM IST VRC கருத்துக்கள்

ரஜினி எதைச் செய்தாலும் அது ஒரு பரபரப்பு தான்! ரஜினி நடித்துள்ள ‘கோச்சடையான்’ பட ரிலீஸ் ’கவுன்ட் டவுன்’ ஸ்டார்ட் ஆகியுள்ள நிலையில் அவரது ரசிகர்களுக்கு மற்றொரு சர்ப்ரைஸாக நேற்று மாலை ரஜினி ட்விட்டரில் இணைந்தார்! ரஜினிகாந்த் டிவிட்டரில் இணைந்த சில நிமிடங்களிலேயே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அவரை பின் தொடர ஆரம்பித்தார்கள்! கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் அவரை ட்விட்டரில் பின் தொடர்கிறார்கள் என்றால் இந்த எண்ணிக்கை மேலும் மேலும் உயர்ந்து எங்கே போய் நிற்கும் எனப்தை இப்போதைக்கு யாராலும் சொல்ல முடியாது! ரஜினி டிவிட்டரில் இணைந்து கிட்டத்தட்ட 15 மணி நேரம் மட்டுமே ஆகியுள்ள நிலையில் 2 லட்சத்திற்கும் மேலான ரசிகர்கள் அவரை பின் தொடர்ந்து கொண்டுள்ளார்கள் என்றால் இதுவும் அவரை பொறுத்தவரையில் ஒரு பெரும் சாதனை தான்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

‘‘அரசியலில் ரஜினியைவிட கமலுக்கே என் ஆதரவு!’’ - நடிகர் ஆர்.கே.சுரேஷ்


;