லாஸ்வேகாசில் பிரபுதேவா நடனம்!

லாஸ்வேகாசில் பிரபுதேவா நடனம்!

செய்திகள் 6-May-2014 11:39 AM IST VRC கருத்துக்கள்

இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்று அழைக்கப்படுபவர் பிரபுதேவா! நடன இயக்குனர், நடிகர், திரைப்பட இயக்குனர் என பல துறைகளிலாக திறம்பட செயல்பட்டு வரும் இவர் நடித்த ஹிந்திப் படம் ’ஏபிசிடி’. 'ANY BODY CAN DANCE' என்ற அடைமொழியுடன் நடனத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டிருந்த இப்படம் சூப்பர் ஹிட் ஆனது! ரெமோ டிசூசா இயக்கிய இப்படம் சென்ற ஆண்டு வெளியானது. இந்தப் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இப்போது அதே டீம் மீண்டும் இணைந்து ‘ஏபிசிடி’ படத்தின் இரண்டாம் பாகமாக ‘ஏபிசிடி 2’ படத்தை எடுக்க இருக்கிறார்கள். விருந்து, பார்ட்டி மற்றும் கொண்டாட்டங்களுக்கு பெயர் பெற்ற ஊரான லாஸ் வேகாசில் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது. இந்தப் படத்தில் 10 பாடல்கள் இடம்பெறவிருக்கிறதாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

போகன் - செந்தூரா வீடியோ


;