சிம்பு படங்கள் என்னாச்சு? - டி.ஆர்.

சிம்பு படங்கள் என்னாச்சு? - டி.ஆர்.

செய்திகள் 6-May-2014 10:40 AM IST VRC கருத்துக்கள்

சிம்பு, ஹன்சிகா நடிக்கும் ‘வாலு’ படத்தை விரைவில் ரிலீஸ் செய்யும் திட்டத்தோடு படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள்! இரண்டு பாடல் காட்சிகள் படம் பிடித்து விட்டால் படம் முடிந்து விடும் என்ற நிலையில், சமீபத்தில் ஒரு பாடல் காட்சியின் படப்பிடிப்பை நடத்தி முடித்து விட்டார்கள்! மீதமுள்ள பாடல் காட்சியை விரைவில் படம் பிடிக்க இருக்கிறார்கள்! ‘நிக் ஆர்ட்ஸ்’ தயாரிக்கும் இப்படத்தினை விஜயசந்தர் இயக்கி வருகிறார், ’வாலு’ படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் சிம்பு, நயன்தாரா ஜோடியாக நடிக்கும் ‘இது நம்ம ஆளு’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்கிறார் ’சிம்பு சினி ஆர்ட்ஸ்’ நிறுவனத்தின் சார்பில் இப்படத்தை தயாரிக்கும் டி.ராஜேந்தர். ‘பசங்க’ பாண்டிராஜ் இயக்கி வரும் இப்படத்தின் 50 சதவிகித படப்பிடிப்பு ஏற்கெனவே முடிந்துவிட்டதாம்! ’வாலு’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் ‘இது நம்ம ஆளு’ படத்தின் படப்பிடிப்பு வேகம் பிடிக்குமாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;