ஏ.ஆர்.ரஹ்மானின் அடுத்த ஹாலிவுட் படம்!

ஏ.ஆர்.ரஹ்மானின் அடுத்த ஹாலிவுட் படம்!

செய்திகள் 5-May-2014 5:58 PM IST VRC கருத்துக்கள்

இந்திய சினிமா இசை அமைப்பாளர்களில் ஹாலிவுட்டிற்கும் சென்று, ஆங்கில படங்களுக்கு இசை அமைத்து, சினிமா விருதுகளிலேயே பெரிதும் மதிக்கப்படும் விருதான ஆஸ்கர் விருது வரைக்கும் பெற்று வந்தவர் ‘இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் என்பது எல்லோருக்கும் தெரியும்! இவருக்கு ஆஸ்கர் விருது பெற்றுத் தந்த படம் ‘ஸ்லம் டாக் மில்லியனர்’. இப்படத்தை தொடர்ந்து ‘127 ஹவர்ஸ்’ என்ற ஆங்கில படத்திற்கும் இசை அமைத்த ஏ.ஆர்.ரஹ்மான், சமீபத்தில் ‘மில்லியன் டாலர் ஆம்’ என்ற மற்றொரு ஆங்கில படத்திற்கும் இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் இறுதியில் ஓடும் டைட்டில் கார்டுடன் வரும் தமிழ் பாடலை தமிழின் பிரபல பின்னணிப் பாடகர்களான கே.எஸ்.சித்ரா மற்றும் உன்னிகிருஷணன் பாடியுள்ளனர். வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் தயாரிப்பான இப்படம் ஹாலிவுட்டில் ரிலீசாவதற்கு ஒரு வாரம் முன்னதாக வருகிற மே- 9 ஆம் தேதி இந்தியாவில் ரிலீசாகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

2.௦ மேக்கிங் வீடியோ - பார்ட் II


;