தமிழில் சயின்ஸ் ஃபிக்‌ஷன் படம்!

தமிழில் சயின்ஸ் ஃபிக்‌ஷன் படம்!

செய்திகள் 5-May-2014 12:42 PM IST VRC கருத்துக்கள்

சயின்ஸ் ஃபிக்‌ஷன் என்று சொல்லப்படும் அறிவியல் பின்னணியின் கதைக்களத்தை கொண்ட திரைப்படங்கள் ஆங்கிலத்தில் ஏராளமாக வந்துள்ளன. ஆனால் தமிழில் ஒரு சில படங்கள் வந்திருந்தாலும் நினைவுக்கு வருவதில்லை. அந்தக்
குறையை போக்கும் விதமாக கனடா நாட்டைச் சேர்ந்த விஷ்ணுமுரளி, செந்தில்குமார் இருவரும் இணைந்து ‘ஐ கேட்ச் மல்டிமீடியா’ நிறுவனம் மூலம் ‘அப்புச்சி கிராமம்’ என்ற படத்தினை தயாரித்துள்ளனர்.

இந்த படத்தை இயக்கியிருப்பவர் ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர் வி.ஆனந்த். புதுமுகங்களான ப்ரவீன்குமார், அனுஷா இருவரும் இணைந்து நடிக்க, இவர்களுடன் நாசர், கிட்டி, ஜோ.மல்லூரி, கஞ்சா கருப்பு, சிங்கம் புலி உட்பட பலர் நடித்துள்ளனர். ஹாலிவுட் ஒளிப்பதிவாளர் பென் ஹட்சன் உடன் பணிபுரிந்த ஜி.கே.பிரசாத் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பவர் ஏ.ஆர்.ரஹ்மானிடம் இருந்த விஷால்.

‘அப்புச்சி கிராமம்’ படத்தை பற்றி இயக்குனர் வி.ஆனந்த் கூறும்போது,
வானத்திலிருந்து எரிகற்கள் தமிழகத்தில் விழப்போகிறது என்பதை விஞ்ஞானிகள் அறிவிக்கின்றனர். இந்த கற்கள் விழுந்தால் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் புல், பூண்டு எதுவும் முளைக்காது, பெருத்த உயிர்சேதமும் ஏற்படும் என்ற அறிவிப்பை கேட்கும் படிப்பறிவு இல்லாத ஒரு கிராமத்தில் மக்கள் நடந்து கொள்ளும் விதம் தான் படத்தின் கதை. அறிவியல் புனைவுக் கதை என்பதால் திரைக்கதையில் சுவாரஸ்யங்களைக் கூட்டியுள்ளோம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி பார்க்கும் படியாக இப்படம் இருக்கும். பொள்ளாச்சி பகுதியைச் சுற்றி படம் பிடித்துள்ளோம்.

அறிவியல் பின்னணியைக் கொண்ட கதையாக இருந்தாலும் எளிதில் புரிந்து கொள்ளும் படியாக வசனம் அமைக்கப்பட்டுள்ளது. வித்தியாசமான திரைப்படங்களைத் தமிழ் சினிமா ரசிகர்கள் என்றைக்குமே கைவிட்டதில்லை. அந்த விதத்தில் இந்தப் படத்திற்கும் ரசிகர்களின் ஆதரவு கிடைக்கும் என்று நம்புகிறோம்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்பைடர் - டிரைலர்


;