சூப்பர் ஸ்டாரை தொடர்ந்து சந்தானம், சித்தார்த்!

சூப்பர் ஸ்டாரை தொடர்ந்து சந்தானம், சித்தார்த்!

செய்திகள் 5-May-2014 11:27 AM IST VRC கருத்துக்கள்

கோலிவுட்டின் தற்போதைய பெரிய எதிர்பார்ப்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘கோச்சடையான்’ பட ரிலீஸ் தான்! இப்படம் வருகிற 9-ஆம் தேதி உலகம் முழுக்க பிரம்மாண்டமான ,முறையில் ரிலீசாகவிருக்கிறது! இந்தப் படத்தின் வெளியீட்டை தொடர்ந்து கோடை விருந்தாக மற்றும் பல படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கின்றன! அந்தப் படங்களில் சந்தானம் ஹீரோவாக நடித்திருக்கும் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ குறிப்பிடத்தக்கது! ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்திற்குப் பிறகு சந்தானம் ஹீரோவாக நடித்திருக்கும் இப்படம் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கிறது. இந்தப் படம் மே 16-ஆம் தேதி ரிலீசாகவிருக்கிறாது. இந்தப் அடத்தை தொடர்ந்து சித்தார்த்- லட்சுமி மேனன் ஜோடியாக நடித்துள்ள ‘ஜிகர்தண்டா’ மே 23-ஆம் தேதி ரிலீசாகிறது! சூப்பர் ஹிட் படமாக அமைந்த ‘பீட்சா’வை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கும் இப்படமும் கோலிவுட்டின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் படமாகும்! ஆக, அடுத்தடுத்து பெரும் எதிபார்ப்பில் இருக்கும் பல படங்கள் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்து படைக்கவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அவள் - காரிகள் கண்ணே பாடல் வீடியோ


;