ஹேப்பி பர்த்டே த்ரிஷா!

Happy birthday Trisha

செய்திகள் 4-May-2014 12:28 PM IST VRC கருத்துக்கள்

’மௌனம் பேசியதே’ படத்தின் மூலம் 2002-ல் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் த்ரிஷா! இந்தப் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோயின்களின் பட்டியலில் இடம் பிடித்த த்ரிஷா , ரஜினிகாந்த் தவிர்த்து தமிழ் சினிமாவின் பெரும்பாலான முன்னணி ஹீரோக்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். தெலுங்கு சினிமாவிலும் முன்னணி ஹீரோயினாக திகழ்ந்து வரும் த்ரிஷா சினிமாவுக்கு வந்து கிட்டத்தட்ட பதிமூன்று ஆண்டுகள் ஆகிறது! தற்போது தமிழ், தெலுங்கு சினிமாவில் எவர் கிரீன் ஹீரோயினாக திகழ்ந்து வரும் த்ரிஷாவுக்கு இன்று (4-5-2014) பிறந்த நாள்! ஒவ்வொரு ஆண்டும் தனது பிறந்த நாளன்று புற்று நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் இயலாதவர்களுக்கு தன்னால் இயன்ற உதவிகள் செய்து, அவர்களை மகிழ்வித்து, தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் த்ரிஷாவுக்கு ‘ டாப் 10 சினிமா’வின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறது!. விஷ் யூ வெரி வெரி ஹேப்பி பர்த்டே த்ரிஷா!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கரு - டிரைலர்


;