தெலுங்கிலும் ஹிட் அடித்த ராஜா ராணி!

தெலுங்கிலும் ஹிட் அடித்த ராஜா ராணி!

செய்திகள் 3-May-2014 11:46 AM IST VRC கருத்துக்கள்

அட்லீ இயக்கத்தில் தமிழில் வெளியாகி வெற்றிபெற்ற படம் ’ராஜா ராணி’. ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா, சத்யராஜ் முதலானோர் நடித்த இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்திருக்கிறார். இப்படம் தமிழில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தெலுங்கிலும் சென்ற மார்ச் மாதம் 14-ஆம் தேதி வெளியானது. தெலுங்கு ரசிகர்களையும் கவர்ந்த ‘ராஜா ராணி’ இப்போது 50 நாட்களை கடந்து இன்னமும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் ‘ராஜா ராணி’ வெற்றிப் படமாக அமைந்துள்ளதால் இயக்குனர் அட்லிக்கு தெலுங்கிலும் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கஜினிகாந்த் - டீசர்


;