விக்ரமின் துருக்கி பயணம்!

விக்ரமின் துருக்கி பயணம்!

செய்திகள் 3-May-2014 11:32 AM IST VRC கருத்துக்கள்

ஷங்கரின் ‘ஐ’ படத்தில் நடித்து முடித்ததைத் தொடர்ந்து ’விக்ரம்’ அடுத்து விஜய் மில்டன் இயக்கும் ‘இடம் மாறி இறங்கியவன்’ என்ற படத்தில் நடிக்கிறார். ‘கோலிசோடா’ படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து விஜய் மில்டன் இயக்கும் இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸும், ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. பயணம் சம்பந்தப்பட்ட ’ரோடு மூவி’யாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் துருக்கி நாட்டில் நடைபெறவிருக்கிறதாம். இந்தப் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக சமந்தா நடிக்க, டி.இமான் இசை அமைக்கிறார். ‘ஐ’ படத்திற்கு பிறகு விக்ரம் நடிக்கும் படம். ’கோலிசோடா’ படத்திற்கு பிறகு விஜய் மில்டன் இயக்கும் படம், சூர்யா, விஜய் ஆகியோருக்குப் பிறகு விக்ரமுடன் சமந்தா ஜோடி சேரும் படம் என பல ஸ்பெஷல்களுடன் இப்படம் உருவாகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ராயீஸ் - டிரைலர்


;