பாலகிருஷ்ணாவுக்கு அடுத்து ரஜினியுடன்…

பாலகிருஷ்ணாவுக்கு அடுத்து ரஜினியுடன்…

செய்திகள் 3-May-2014 10:29 AM IST VRC கருத்துக்கள்

ரஜினிகாந்த் நடிக்கும் ‘லிங்கா’ படத்தின் பூஜை நேற்று மைசூரில் நடந்ததையொட்டி தொடர்ந்து அங்கு படப்பிடிப்பும் நடந்து வருகிறது. இன்று நடக்கும் படப்பிடிப்பில் ரஜினியுடன் சோனாக்‌ஷி சின்ஹா கலந்து கொள்கிறார். இந்தப் படத்தில் ரஜினிகாந்த் இரண்டு வேடங்களில் நடிக்க, ஒரு ரஜினிக்கு சோனாக்‌ஷி சின்ஹாவும், இன்னொரு ரஜினிக்கு அனுஷ்காவும் ஜோடியாக நடிக்கிறார்கள். கே.எஸ்.ரவிகுமார் இயக்கி வரும் இப்படத்தில் தெலுங்கின் முன்னணி நடிகர் ஜெகபதி பாபுவும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். சமீபத்தில் பாலகிருஷ்ணா ஹீரோவாக நடித்து தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டானா ’லெஜென்ட்’ படத்தில் ஜெகபதி பாபுவும் முக்கியமான ஒரு கேரக்டரில் நடித்திருந்தார். இப்படத்தில் இவரது பர்ஃபார்மென்ஸை பார்த்துதான் ரஜினிகாந்தின் ‘லிங்கா ’படத்தில் நடிக்க அவருக்கு அழைப்பு விடுத்தார்களாம். ஏற்கெனவே ரஜினிகாந்துடன் ஒரு படத்தில் ஜெகபதி பாபு நடித்திருக்கிறார் என்றாலும் ரஜினிகாந்த், கே.எஸ்.ரவிகுமார், ஏ.ஆர்.ரஹ்மான் என பெரும் கூட்டணி அமைந்துள்ள ‘லிங்கா’வில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதில் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார் ஜெகபதி பாபு!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

‘‘அரசியலில் ரஜினியைவிட கமலுக்கே என் ஆதரவு!’’ - நடிகர் ஆர்.கே.சுரேஷ்


;