ஏ.ஆர்.முருகதாஸ் உதவியாளரின் அப்புச்சி கிராமம்!

ஏ.ஆர்.முருகதாஸ் உதவியாளரின் அப்புச்சி கிராமம்!

செய்திகள் 3-May-2014 10:13 AM IST VRC கருத்துக்கள்

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் உதவியாளர் வி.ஆனந்த் இயக்கியிருக்கும் படம் ‘அப்புச்சி கிராமம்’. ‘ஐ கேட்ச் மல்டிமீடியா’ நிறுவனம் சார்பில் விஷ்ணு முரளி, செந்தில்குமார் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் ஜி.எம்.குமார், கஞ்சா கருப்பு, கும்கி ஜோசஃப், சிங்கம் புலி முதலானோர் நடித்திருக்க, இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பள்ளியில் பாடம் பயின்ற விஷால் சந்திரசேகர் இசை அமைத்திருக்கிறார். சயன்ஸ் ஃபிக்‌ஷன் கதையை கொண்ட இப்படம் கிராமத்தில் நடப்பது மாதிரி படமாக்கப்பட்டுள்ளதாம்! படப்பிடிப்பு முடிந்து விரைவில் ரிலீசாகவிருக்கும் இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நாளை சென்னையிலுள்ள சத்யம் தியேட்டரில் நடைபெறவிருக்கிறது. இப்படத்தில் நிறைய புதுமுகங்கள் பங்கேற்றிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்க அம்சம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

2.௦ மேக்கிங் வீடியோ - பார்ட் II


;