100-ஆவது நாளை தொட்ட கோலிசோடா!

100-ஆவது நாளை தொட்ட கோலிசோடா!

செய்திகள் 2-May-2014 2:43 PM IST VRC கருத்துக்கள்

இந்த வருடம் வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்ற படங்களில் ‘கோலிசோடா’வுக்கு தனி இடம் உண்டு! காரணம் பெரிய நடிகர்கள் நடித்து, பெரிய இயக்குனர்கள் இயக்கி, பெரிய பட்ஜெட்டில் உருவாகி வெற்றியடைந்த சில படங்களை விட, புதுமுகங்கள் நடித்து, சிறிய பட்ஜெட்டில் தயாரான இப்படம், படம் சம்பந்தப்பட்ட அத்தனை பேருக்கும் நல்ல லாபத்தை பெற்றுத் தந்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம் 24-ஆம் தேதி வெளியாகிய இப்படம் நூறாவது நாளை தொட்டு இன்னமும் ஓடிக்கொண்டிருக்கிறது. விஜய் மில்டன் இயக்கிய இப்படத்தின் வெற்றி, கோலிவுட்டின் சிறு முதலீட்டு பட தயாரிப்பாளர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கடுகு - டீசர்


;