லிங்குசாமிக்கு நன்றி!

லிங்குசாமிக்கு நன்றி!

செய்திகள் 2-May-2014 12:49 PM IST Inian கருத்துக்கள்

விஜய் வசந்த், மகிமா நடிப்பில் வெளிவந்து, ஆர்ப்பாட்டம் இல்லாமல் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘என்னமோ நடக்குது’. இப்படம் சம்பந்தமான செய்தியாளர்கள் சந்திப்பில் படத்தின் தயாரிப்பாளார் வினோத் பேசும்போது, ‘’இப்படம் கடந்த இரண்டு ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்து வந்தது. படம் வெற்றிகரமாக வெளியாக இருந்த நேரத்தில் படத்தின் டைட்டில் பிரச்சனையுடன் வேறு சில பிரச்சனைகளும் ஏற்பட, சோர்ந்து போயிருந்தேன். அந்த சமயத்தில் ‘திருப்பதி பிரதர்ஸ்’ லிங்குசாமி மற்றும் போஸுக்கு இப்படத்தை போட்டு காட்டினேன். படத்தை பார்த்து விட்டு அவர்கள் பாராட்டியதுடன் படம் வெளியாவதற்கான அத்தனை உதவிகளையும் செய்தனர். அதை என்னால் மறக்கமுடியாது அவர்களுக்கு என் நன்றி.

இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. முதலில் குறைந்த அளவிலான தியேட்டர்களில் வெளியிடப்பட்ட இப்படம் ரசிகர்கள் கொடுத்த ஆதரவினால் இப்போது தியேட்டர்களில் காட்சிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மேலும் சில தியேட்டர்களிலும் படத்தை வெளியிடபட்டுள்ளது’’ என்று உற்சாகமாக கூறினார்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

R K நகர் - டீசர்


;