'ஜெயம்’ ரவியிடம் சிக்ஸ் பேக் ஆலோசனை கேட்கும் ஹீரோக்கள்!

'ஜெயம்’ ரவியிடம் சிக்ஸ் பேக் ஆலோசனை கேட்கும் ஹீரோக்கள்!

செய்திகள் 2-May-2014 7:06 PM IST VRC கருத்துக்கள்

‘ஜெயம்’ ரவியை அடையாளம் காட்டிய படங்களில் ‘எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி’ குறிப்பிடத்தக்க ஒரு படம்! இந்தப் படத்தில் கிக் பாக்ஸராக நடித்த ’ஜெயம்’ ரவி, விரைவில் ரிலீசாகவிருக்கிற ‘பூலோகம்’ படத்தில் பாக்ஸராக நடித்துள்ளார்! இந்தப் படத்தை தொடர்ந்து ’ஜெயம்’ ரவி தற்போது நடித்து வரும் படம் ‘ரோமியோ ஜூலியட்’. இந்தப் படத்தில் சிக்ஸ் பேக் எக்ஸ்பர்ட் ஆக நடிக்கிறார் ரவி. இப்படத்தின் கதைபடி நிறைய சினிமா ஹீரோக்கள் ’ஜெயம்’ ரவியிடம் சிக்ஸ் பேக் வைக்கணும்னு தேடி வருவார்களாம்! அப்படி சிக்ஸ் பேக் வைக்க இவரை தேடி வரும் அந்த சினிமா ஹீரோக்கள் யார் யார் என்பதை சஸ்பென்ஸாக வைத்திருக்கிறார்கள்! இந்தப் படத்தை எஸ்.ஜே.சூர்யாவின் அசிஸ்டென்ட் லக்ஷ்மண் இயக்குகிறார். பிரபு தேவா இயக்கிய ‘எங்கேயும் காதல்’ படத்தில் ஏற்கெனவே ‘ஜெயம்’ ரவியுடன் ஜோடியாக நடித்த ஹன்சிகா தான் இப்படத்திலும் ரவிக்கு ஜோடி!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வில்லன் வேர்ல்ட் பாடல் வரிகள் வீடியோ - சதுரங்க வேட்டை 2


;