சிநேகா தயாரிப்பில் பிரசன்னா நடிக்கிறார்!

சிநேகா தயாரிப்பில் பிரசன்னா நடிக்கிறார்!

செய்திகள் 2-May-2014 11:45 AM IST VRC கருத்துக்கள்

நட்சத்திர தம்பதியான பிரசன்னாவும், சிநேகாவும் சேர்ந்து ‘கேம் சேஞ்சர் என்டர்டெயின்மென்ட்’ என்ற பட நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். இந்நிறுவனத்தின் மூலம் திறமையானவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவுள்ளனராம்!. இவர்களது நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக ‘டோனாவூர் ராதா’ என்ற படத்தை தயாரிக்கின்றனர். இப்படத்தில் சிநேகாவும், பிரசன்னாவும் ஜோடி சேர்ந்து நடிக்க, இப்படத்தை பாண்டிராஜின் உதவியாளராக பணியாற்றிய லக்‌ஷ்மிராமு இயக்குகிறார். இப்படத்திற்கு பிறகு ‘அச்சமுண்டு அச்சமுண்டு’ பட இயக்குனர் அருண்வைதியநாதன் இயக்கும் ஒரு படத்தையும் தயாரிக்கின்றனர். இப்படத்தில் பிரசன்னா நடிக்கவுள்ளார். மற்ற நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

துப்பறிவாளன் - டிரைலர்


;