மீண்டும் மாப்பிள்ளை ரஜினி!

மீண்டும் மாப்பிள்ளை ரஜினி!

செய்திகள் 2-May-2014 11:02 AM IST Top 10 கருத்துக்கள்

‘கோச்சடையான்’ படம் முடிந்ததும், ரஜினிகாந்த், கே.எஸ்.ரவிகுமார் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் என்று பரபரப்பாக பேசப்பட்டு வந்தது! சமீபத்தில் இப்படத்திற்கு ‘லிங்கா’ என்று பெயர் சூட்டப்பட்டதோடு படத்தின் பூஜையும் இன்று காலை மைசூரிலுள்ள சாமுண்டீஸ்வரி கோயிலில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் ரஜினிகாந்த், கே.எஸ்.ரவிகுமார், இப்படத்தை தயாரிக்கும் ‘ராக்லைன்’ வெங்கடேஷ் ஆகியோருடன் கன்னட படவுலகின் பிரபலங்கள் அம்பரீஷ், சுமலதா மற்றும் பலர் கலந்துகொண்டனர். இந்தப் படத்தில் ரஜினி இரண்டு வேடங்களில் நடிக்கிறார். ஒரு ரஜினிகாந்துக்கு பாலிவுட் நடிகை சோனாக்‌ஷி சின்ஹாவும், இன்னொரு ரஜினிக்கு அனுஷ்காவும் ஜோடியாக நடிக்கிறார்கள். இந்த பூஜையில் ’மாப்பிள்ளை’ கெட்-அப்பில் ஸ்டைலிஷாக தோற்றளித்த ரஜினி இப்படத்தில் மாறுபட்ட இரண்டு வேடங்களில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்திற்கு கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘முத்து’, ‘படையப்பா’ படங்களுக்கு இசை அமைத்த ஏ.ஆர்.ரஹ்மானே இசை அமைக்கிறார். ரஜினி நடித்த ‘எந்திரன்’ படத்தில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார். ’லிங்கா’ பிரம்மாண்டமான் முறையில் உருவாகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

2.௦ மேக்கிங் வீடியோ - பார்ட் II


;