மே-12ல் ‘யான்’ இசை!

மே-12ல்  ‘யான்’ இசை!

செய்திகள் 30-Apr-2014 5:40 PM IST VRC கருத்துக்கள்

இந்திய சினிமாவின் சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவர் ரவி கே.சந்திரன். இவர் முதன் முதலாக இயக்கும் படம் ’யான்’. ஜீவா, துளசி நாயர் ஜோடியாக நடிக்கும் இப்படத்தை ஆர்.எஸ்.இன்ஃபோடெய்ன்மென்ட் நிறுவனம் பிரம்மாண்டமான முறையில் தயாரித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டதை எட்டியுள்ளது. கோலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். இப்படத்தில் ஜீவா, துள்சி நாயருடன் முக்கிய கேரக்டர்களில் நாசர், பிரகாஷ் ராஜ் ஆகியோரும் நடிக்கிறார்கள்! இந்திய சினிமாவின் பெரிய இயக்குனர்கள் பலர் இயக்கிய படங்களில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்துள்ள ரவி கே.சந்திரன் முதன் முதலாக இயக்கியிருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மே 12-ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெறவிருக்கிறது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கீ - டீசர்


;