சர்ச்சைக்கு பதிலடி கொடுத்த அமலா பால்!

சர்ச்சைக்கு பதிலடி கொடுத்த அமலா பால்!

செய்திகள் 30-Apr-2014 4:13 PM IST VRC கருத்துக்கள்

நடிகை அமலா பால் இயக்குனர் விஜய்யை திருமணம் செய்யவிருக்கிறார் என்ற செய்தி வெளியானதும், அமலா பால் நடிக்க ஒப்புக்கொண்ட தெலுங்கு படமான ‘வஸ்தே நீ வேனுகா’ படத்திலிருந்து அவரை நீக்கி விட்டதாக மீடியாக்களில் செய்திகள் வெளியாகி இருந்தது! ஆனால் படத்திலிருந்து தன்னை நீக்கி விட்டதாக வரும் செய்திகள் உண்மைக்கு புறமானது என்று ஒரு அறிக்கையில் கூறி இருக்கிறார் அமலா பால்! அதில்,

’‘வஸ்தே நீ வேனுகா’ படத்தில் நான் நடிக்க ஒப்புக்கொண்டது உண்மை தான்! அதற்காக இந்த வருடம் மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை 45 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருந்தேன்! ஆனால் நான் கொடுத்த தேதிகளில் அவர்கள் திட்டமிட்டபடி படப்பிடிப்பை நடத்தவில்லை! அத்துடன் இது சம்பந்தமாக நான் அவர்களிடம் பேசினாலும், அதற்கும் சரியான பதில்கள் கிடைக்கவில்லை! அவர்களுக்கு நான் கொடுத்த தேதிகளில் படப்பிடிப்பை நடத்தாமல் இப்போது என் திருமண விஷயத்தை காரணம் காட்டி என்னை அப்படத்திலிருந்து நீக்கி விட்டதாக கூறுகிறார்கள்! இதில் உண்மையில்லை!’’ என்று தெரிவித்திருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கரு - டிரைலர்


;