தொடர் வெற்றிகளை கொடுத்து வரும் உதயநிதி!

தொடர் வெற்றிகளை கொடுத்து வரும் உதயநிதி!

செய்திகள் 30-Apr-2014 12:16 PM IST VRC கருத்துக்கள்

கோலிவுட்டில் தயாரிப்பாளர், வினியோகஸ்தர், நடிகர் என பல முகங்களுடன் வெற்றி வலம் வந்து கொண்டிருப்பவர் உதயநிதி ஸ்டாலின்! இவர் ஹீரோ அவதாரம் எடுத்து முதன் முதலாக நடித்த ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படம் வெற்றிப் படமாக அமைந்தது. இந்தப் படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்க, எம்.ராஜேஷ் இயக்கியிருந்தார்! இந்தப் படத்தை தொடர்ந்து உதயநிதி கதாநாயகனாக நடித்த படம் ‘இது கதிர்வேலன் காதல்’. எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கிய இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார்! இந்தப் படமும் உதயநிதிக்கு வெற்றிப்படமாக அமைந்துள்ளது! இந்த படம் வெளியாகி இன்று 75-வது நாள்! இப்படி நடிகராக, தயாரிப்பாளராக, வினியோகஸ்தராக தொடர் வெற்றிகளை கொடுத்து வரும் உதயநிதி ஸ்டாலினின் அடுத்த படம் ‘நண்பேன்டா’. இந்தப் படத்தில் ‘இது கதிர்வேலன் காதல்’ படத்தின் மூலம் உதயநிதிக்கு ராசியான நடிகையாகிவிட்ட நயன்தாராவே ஜோடி சேருகிறார்! தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பில் பிசியாக இயங்கி வருகிறார் உதயநிதி ஸ்டாலின்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வேலைக்காரன் - எழு வேலைக்காரா பாடல் வீடியோ


;