ரஜினி பட டைட்டில் ரெடி!

ரஜினி பட டைட்டில் ரெடி!

செய்திகள் 29-Apr-2014 3:18 PM IST VRC கருத்துக்கள்

ரஜினியின் ‘கோச்சடையான்’ மே 9-ஆம் தேதி ரிலீசாவதையொட்டி பரபரப்பாக இயங்கி வருகின்றனர் ’கோச்சடையான்’ படக் குழுவினர்! அதே நேரத்தில் ரஜினி அடுத்து நடிக்கும் படத்தின் வேலைகளும் வேகம் பிடித்துள்ளது. ‘ராக்லைன்’ வெங்கடேஷ் தயாரிப்பில் பிரம்மாண்ட படமாக உருவாகவுள்ள இப்படத்தை கே.எஸ்.ரவிகுமார் இயக்குகிறார். இந்தப் படத்தில் ரஜினி இரண்டு வேடங்களில் நடிக்கிறார் என்றும், ஒரு ரஜினிக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை சோனாக்‌ஷி சின்ஹாவும், இன்னொரு ரஜினிக்கு ஜோடியாக அனுஷ்காவும் நடிக்க இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்திற்கு ‘லிங்கா’ என்று பெயர் வைத்திருப்பதாகவும், இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் மே 2-ஆம் தேதி மைசூரில் துவங்கவிருக்கிறது என்றும், அங்கு தொடர்ந்து 40 நாட்கள் படப்பிடிப்பு நடக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது! ரஜினிகாந்தின் பேரன் (தனுஷ் மகன்) பெயர் லிங்கா என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினி நடித்த ‘எந்திரன்’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்த ரத்னவேலு தான் இந்தப் படத்திற்கும் ஒளிப்பதிவாளர்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

‘‘அரசியலில் ரஜினியைவிட கமலுக்கே என் ஆதரவு!’’ - நடிகர் ஆர்.கே.சுரேஷ்


;