அஜித்தின் 5 ட்ரீட்ஸ்!

அஜித்தின் 5 ட்ரீட்ஸ்!

செய்திகள் 29-Apr-2014 11:29 AM IST VRC கருத்துக்கள்

மே-1 என்றதும் எல்லோருக்கும் முதலில் நினைவுக்கு வருவது தொழிலாளர் தினம் தான்! ஆனால் சமீபகாலமாக ’மே-1’ என்றதும் நடிகர் அஜித்தின் பிறந்த நாள் என்பதும் மக்கள் மனதில் ஆழமாக பதிந்து விட்டது! இதற்கு காரணம், ரசிகர்கள் அஜித்தின் பிறந்தநாளையொட்டி செய்து வரும் சில நற்பணிகளும், விளம்பரங்களும் தான்! அந்த வகையில் அஜித்தின் இந்த வருட பிறந்த நாளையொட்டி நெல்லை மாவட்ட அஜித் தலமை ரசிகர்கர் மன்றத்தினர் மாபெரும் ரத்ததான முகாம் ஒன்றை நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள்! இத்தனைக்கும் அஜித் தனது ரசிகர் மன்றங்களை கலைத்து விட்டு, ஒரு சில ஆண்டுகள் ஆன நிலையிலும் அவரது ரசிகர்கள் எந்த பலனையும் எதிர்பாராமல் இன்னமும் பல நற்பணிகளை செய்து வருகிறார்கள் என்றால் அது ரசிகர்களுக்கு அஜித் மீதிருக்கும் அன்பையும், மரியாதையையும் தான் வெளிக் காட்டுகிறது!

இந்த வருட அஜித்தின் பிறந்தநாளையொட்டி ரசிகர்களுக்கு பல ‘ட்ரீட்’கள் காத்திருக்கிறது! சரண் இயக்கத்தில், அஜித் – ஷாலினி ஜோடியாக நடித்து சூப்பர் ஹிட் ஆன ‘அமர்க்களம்’ படம் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு அஜித் பிறந்த நாள் பரிசாக மே-1 ஆம் தேதி ரிலீசாகவிருக்கிறது. அத்துடன் அஜித் நடித்த ‘ஆரம்பம்’ படம் ஜெயா டிவியிலும், ‘வீரம்’ படம் சன் டிவியிலும் அஜித்தின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக மே-1ஆம் தேதி ஒளிபரப்பாகவிருக்கிறது! இது தவிர கௌதம் மேனன் இயக்கத்தில் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் அஜித்தின் 55-ஆவது படத்தின் ’ஃபர்ஸ்ட் லுக்’கும் அஜித் பிறந்தநாள் பரிசாக ரசிகர்களுக்கு விருந்து படைக்கவிருக்கிறது என்று கூறப்படுகிறது!
ஆக, அஜித்தின் இந்த வருட பிறந்த நாள் ‘அமர்க்கள’ப்படப் போகிறது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;