’பை’க்கு யு, ‘பய’த்துக்கு யு/ஏ

’பை’க்கு யு, ‘பய’த்துக்கு யு/ஏ

செய்திகள் 29-Apr-2014 10:45 AM IST Top 10 கருத்துக்கள்

’திருப்பதி பிரதர்ஸ்’ தயாரிப்பில் விமல், லட்சுமிமேனன் நடித்துள்ள படம் ’மஞ்சப்பை’. என்.ராகவன் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் எல்லா வேலைகளும் முடிந்து படம் ரிலீஸுக்கு தயாராகி வர, இந்தப் படத்தை தணிக்கை குழுவினருக்கு சமீபத்தில் போட்டு காட்டப்பட்டது! தணிக்கைக் குழுவினர் ‘மஞ்சப்பை’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள்! இப்படம் மே மாதம் ரிலீசாகவிருக்கிறது.

மே வெளியீடாக வெளிவரவிருக்கும் இன்னொரு படம் ‘யாமிருக்க பயமே’. ‘ஆர்.எஸ். இன்ஃபோடெய்ன்மென்ட்’ நிறுவன தயாரிப்பில் கிருஷ்ணா, ரூபா மஞ்சரி ஜோடியாக நடித்துள்ள இப்படத்தை டீகே இயக்கியிருக்கிறார். முழுக்க முழுக்க நைனிட்டாலில் படமாக்கப்பட்ட திகில் படம் என்ற விளம்பரத்துடன் வரும் இப்படமும் சமீபத்தில் தணிக்கையானது! இப்படத்திற்கு சென்சர் அதிகாரிகள் ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள்! இந்த இரண்டு படங்களும் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் இருக்கும் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

றெக்க - டிரைலர்


;