சண்டை காட்சியில் அடிப்பட்ட விஷால்!

சண்டை காட்சியில் அடிப்பட்ட விஷால்!

செய்திகள் 29-Apr-2014 10:09 AM IST VRC கருத்துக்கள்

ஹரி இயக்கத்தில் விஷால் நடிக்கும் படம் ‘பூஜை’. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னை சாலிகிராமத்தில் உள்ள மோகன் ஸ்டூடியோவில் நடந்து வருகிறது. அங்கு அமைத்துள்ள பிரம்மாண்ட செட்டில் விஷால் ஸ்டன்ட் நடிகர்களுடன் மோதும் சண்டை காட்சியை படமாக்கினார்கள்! ஸ்டன்ட் மாஸ்டர் கனல் கண்ணனின் சண்டை பயிற்சியில் இக்காட்சி படமாக்கப்பட்ட வருகிறது. அப்போது விஷால் ஒரு ஸ்டன்ட் நடிகரை ஓங்கி அடிப்பது மாதிரி நடிக்கும்போது, அந்த ஸ்டன்ட் நடிகர் திடீர் என்று விலகிக் கொண்டதால் விஷாலின் கை ஒரு தகரத்தில் பட்டு அவருடையை இரண்டு விரல்களில் சதை கிழிந்து ரத்தம் கொட்டியது. உடனே அவரை அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு கைவிரல்களில் தையல் போடப்பட்டன. இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. டாக்டர்கள் விஷாலை ஒரு சில நாட்கள் ஓய்வு எடுக்க சொல்லியிருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இரும்புத்திரை - யார் இவன் ஆடியோ பாடல்


;