ரிலீசுக்கு ரெடியாகும் ‘வாலு’

ரிலீசுக்கு ரெடியாகும் ‘வாலு’

செய்திகள் 28-Apr-2014 4:08 PM IST VRC கருத்துக்கள்

சிம்பு, ஹன்சிகா ஜோடியாக நடிக்கும் ’வாலு’ படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிவடைந்த நிலையில் இப்படத்தின் ஒரு பாடல் காட்சியின் படப்பிடிப்பு மட்டும் பாக்கி இருந்தது! இந்நிலையில் சிம்பு – ஹன்சிகாவுக்கு இடையில் மலர்ந்த காதல், அதனை தொடர்ந்து உருவாகிய சர்ச்சைகள், அதன் பிறகு ஏற்பட்ட காதல் முறிவு போன்ற பிரச்சனைகளால் இதன் படப்பிடிப்பு தள்ளிக் கொண்டே போனது. இந்நிலையில் இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியானது. பாடல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது. ‘வாலு’ ஆலபத்தில் இடம் பெற்றுள்ள ‘யூ ஆர் மை டார்லிங்…’ என்ற பாடல் மட்டும் படம் பிடிக்காமல் இருந்த நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரின் வேண்டுகோளின் படி நீண்ட நாட்களுக்கு பிறகு சிம்பு – ஹன்சிகா அந்த பாடல் காட்சியில் நடித்து கொடுத்துள்ளனர். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் பெங்களூரில் நடந்தது. ஒரு வழியாக படப்பிடிப்பு முடிந்துள்ள ‘வாலு ’விரைவில் திரைக்கும் வரும் என்று கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;