அரபு நாடுகளில் உருவான தமிழ்ப்படம்!

அரபு நாடுகளில் உருவான தமிழ்ப்படம்!

செய்திகள் 28-Apr-2014 3:37 PM IST Inian கருத்துக்கள்

மோகன்லால், பாலசந்திரமேனன், சுரேஷ்கோபி உள்ளிட்ட மலையாள முன்னணி நட்சத்திரங்களை இயக்கியவர் அசோக் ஆர் நாத். இவர் பாலசந்திரமேனன், மனோஜ் கே ஜெயன், சுமித்ரா நடித்த தன்னுடைய முதல் படமான ‘ஷபலம்’ திரைப்படத்தில் சிறந்த இயக்குனருக்கான தேசிய விருது பெற்றவர்.

இவரது இயக்கத்தில் உருவாகிவரும் முதல் தமிழ்ப் படம் ‘திருந்துடா காதல் திருடா’. மலையாளத்தில் பல படங்களை தயாரித்த ‘நியூ டிவி’ நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தை முழுக்க முழுக்க அரபு நாடுகளில் படமாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தில் ஆதில் இப்ராஹிம், சுதக்‌ஷனா, ரஷ்யாவைச் சேர்ந்த நடிகை ஓல்காகோவல்சக் ஆகியோருடன் முகேஷ், கொச்சு பிரேமன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

இயக்குனர் அசோக் ஆர் நாத் படம் பற்றி கூறும்போது, ‘‘காதல் வலிமையானது. களங்கமின்றி அதில் வெற்றி காணவேண்டும். அவ்வெற்றிக்காக போராடும் ஒரு இளம் பெண்ணின் வித்தியாசமான போராட்டமே ‘திருந்துடா காதல் திருடா’.

மேலும் இப்படத்தில் இந்தியாவிலிருந்து அரபு நாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் மூன்று தலைமுறையினரை பற்றி விரிவாக சொல்லியிருக்கிறோம். அரசாங்கத்திற்கு தெரியாமல் செல்பவர்கள், ஏஜென்ட் மூலமாக செல்பவர்கள், ஐ.டி. படித்து முறையாக செல்பவர்கள் என மூன்று விதமானவர்கள் அங்கு எந்த மாதிரியான வாழ்க்கை வாழ்கிறார்கள் என்பதையும் தத்ரூபமாக சொல்லியிருக்கிறோம். அரபு நாடுகளில் யாரும் படம் பிடிக்காத பல பகுதிகளை சிறப்பு அனுமதி பெற்று படம் பிடித்துள்ளோம். இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வரும் இப்படம் விரைவில் வெளிவரவிருக்கிறது’’ என்றார் இயக்குனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வில்லன் - trailer


;