‘கோச்சடையான்’ ரிலீசில் மாற்றமில்லை!

‘கோச்சடையான்’ ரிலீசில் மாற்றமில்லை!

செய்திகள் 28-Apr-2014 2:38 PM IST VRC கருத்துக்கள்

ரஜினிகாந்தின் ‘கோச்சடையான்’ படம் மே 9-ஆம் தேதி ரிலீஸ் என பரபரப்பாக விளம்பரங்கள் வந்து கொண்டிருக்க, ஒரு புறம் இந்தப் படத்தினை தயாரித்துள்ள நிறுவனத்தின் முந்தைய படம் சம்பந்தமான வியாபார பிரச்சனையால் ‘கோச்சடையான்’ குறிப்பிட்ட தேதியில் வெளிவராது என்றும் படத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றும் செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன! இந்நிலையில் சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த், ‘கோச்சடையான்’ படத்திற்கு சிக்கல் என்றும், படம் குறிப்பிட்ட தேதியில் வெளிவராது என்றும் வரும் செய்திகளை யாரும் நம்பவேண்டாம்! ‘கோச்சடையான்’ திட்டமிட்டபடி மே 9-ஆம் தேதி ரிலீஸ் ஆகும்’’ என்று உறுதிபட தெரிவித்திருக்கிறார். இதனால் ‘கோச்சடையான்’ படம் மே 9-ஆம் தேதி ரிலிசாவது உறுதியாகிவிட்டது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பத்மாவத் - டிரைலர்


;