பவர்ஃபுல் கேரக்டரில் அமலாபால்!

பவர்ஃபுல் கேரக்டரில் அமலாபால்!

செய்திகள் 28-Apr-2014 11:37 AM IST VRC கருத்துக்கள்

மலையாளத்தில் சூப்பர் ஹிட் ஆன ‘டிராஃபிக்’ படத்தை இயக்கியவர் ராஜேஷ் பிள்ளை. இவர் தற்போது ‘டிராஃபிக்’ படத்தை ஹிந்தியில் இயக்கி வருகிறார். இந்தப் படத்தை முடித்ததும் ’மிலி’ என்ற மலையாள படத்தை இயக்கவிருக்கிறார் ராஜேஷ் பிள்ளை! இயல்பாகவே தைரியமான, துணிச்சல் மிக்க ஒரு பெண்ணை பற்றி சித்தரிக்கும் இப்படத்தில் அந்த பவர்ஃபுல்லான ‘மிலி’ என்ற அந்த கேரக்டரில் அமலா பால் நடிக்கிறார். ‘நேரம்’ படத்தில் நடித்த நிவின் பாலி அமலா பாலுடன் சிறிய ஒரு கேரக்டரில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மே மாதம் துவங்கவிருக்கிறது. ஏற்கெனவே மலையாளத்தில் மோகன்லால், ஃபஹத் ஃபாசில் முதலானோருடன் ஜோடியாக நடித்துள்ள அமலா பால் நிவின் பாலியுடன் இணைந்து நடிக்கும் முதல் படம் இது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அம்மா கணக்கு - டிரைலர்


;