ஹாலிவுட் போற்றும் தமிழன் ராமானுஜன்!

ஹாலிவுட் போற்றும் தமிழன் ராமானுஜன்!

செய்திகள் 28-Apr-2014 10:26 AM IST Inian கருத்துக்கள்

‘மோகமுள்’ என்ற தனது அறிமுக படத்திலேயே பரபரப்புக்குள்ளானவர் இயக்குனர் ஞானராஜசேகரன். தொடர்ந்து ‘பாரதி’, ‘பெரியார்’ போன்ற படங்களை இயக்கிய இவர் அடுத்து இயக்கியிருக்கும் படம் ‘ராமானுஜன்’.

கணிதமேதை ராமனுஜனின் ஆய்வுகளில் ‘தியேரி ஆஃப் ஈகுவேஷன்ஸ்’, ‘தியேரி ஆஃப் நம்பர்ஸ்’ உள்ளிட்ட பல ஆய்வுகள் மிகச் சிறந்தவையாக கருதப்படுகிறது. உலகம் முழுவதிலும் புகழ் பெற்று விளங்கிவரும் இவரின் வாழ்க்கை வரலாற்றை ‘கேம்பர் சினிமா’ நிறுவனம் மூலம் ஶ்ரீவத்சன் நடத்தூர், சுஹாந்த் தேசாய், சரண்யன் நடத்தூர், சிந்துராஜசேகரன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். நடிகை சாவித்திரியின் பேரன் அபிநய் ராமானுஜராக நடித்திருக்கிறார். அவரது தாயாராக சுஹாசினி மற்றும் மனோபாலா, ‘தலைவாசல்’ விஜய், ஒய்.ஜி.மகேந்திரன் உள்பட பலர் நடித்துள்ளனர்.
படம் குறித்து பேசிய இயக்குனர் ஞானராஜசேகரன்,

‘‘பாரதி’, ‘பெரியார்’, படங்களுக்கு பிறகு 15-க்கும் மேற்பட்ட அரசியல்வாதிகளின் வாழக்கை வரலாற்றை படமாக்க வேண்டுமென பலர் கேட்டு வந்தனர். நான் அதை தவிர்த்தேன். இயக்குனர் என்ற முறையில் ஒரே மாதிரியான படங்களை எடுப்பதற்கு எனக்கு விருப்பமில்லை.

ஒரு முறை ஹாலிவுட் படம் ஒன்றை பார்த்தேன். அதில் ஒரு வசனம் ‘நீ என்ன பெரிய ராமானுஜனா’ என்ற வசனத்தை கேட்டவுடன் எனக்கு மிகப்பெரிய ஆச்சர்யம்! நாம் கொண்டாடப்பட வேண்டிய ஒரு மேதையை மேற்கத்தியவர்கள் கொண்டாடி கொண்டிருக்கிறார்களே! என எண்ணியபோது ராமானுஜன் வாழ்க்கையை படமெடுக்க முடிவும் செய்தேன் அதற்கேற்றார் போல் இளைஞர்கள் இப்படத்தை தயாரிக்க முன்வந்தது எனக்கு மேலும் உற்சாகத்தை தந்தது.

ராமனுஜனின் வாழ்க்கையில் நடந்த பல நிகழ்வுகள் சினிமாவுக்கான சுவாரஸ்யங்களுடன் இருந்தது. அதை எல்லாவற்றையும் தொகுத்து சினிமாவிற்கேற்ற சில விஷயங்களையும் சேர்த்து இப்படத்தை உருவாக்கியுள்ளேன். முதலில் இப்படத்தில் நடிக்க மாதவனை அணுகியபோது அவர் வேறொரு படத்தில் நடிக்க இருந்ததால் அவரால் இதில் நடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. வேறு சில ஹீரோக்களை நடிக்க அழைத்தேன்! ஆனால் இமேஜ் என்ற ஒன்று அவர்களை தடுத்தது.

மொத்ததில் முழுமையான ஒரு சிறந்த படமாக ‘ராமானுஜன்’ உருவாகியுள்ளது. இப்படத்தை விரைவில் வெளியிடுவதற்கான வேலைகளை செய்து வருகிறோம்’’ என்றார்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

குரங்கு பொம்மை - ட்ரைலர்


;