ரஜினி வந்தாரா? - ராஜமௌலி விளக்கம்

Rajini visit Bahubali set?

செய்திகள் 26-Apr-2014 3:02 PM IST VRC கருத்துக்கள்

ரஜினியின் ‘கோச்சடையான்’ படம் தெலுங்கில் ’விக்ரமசிம்ஹா’ என்ற பெயரில் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்தது. இந்த விழாவில் தெலுங்கின் முன்னணி இயக்குனரான ராஜமௌலி உட்பட பல தெலுங்கு சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டனர். அப்போது, ராஜமௌலியிடம் அவர் இயக்கி வரும் பிரம்மாண்ட படமான ‘பாஹுபலி’யின் பிரம்மாண்ட செட்டுகளையும், அங்கு நடக்கும் படப்பிடிப்பையும் பார்க்க தான் ஆவலாக இருப்பதாகவும், விரைவிலேயே வருவதாகவும் சொல்லியிருக்கிறார் ரஜினிகாந்த்! இதனை தொடர்ந்து மீடியாக்கள், ரஜினி ’பாஹுபாலி’ பட செட்டுக்கு போனதாகவும், அங்கு அமைக்கப்பட்டிருந்த அரங்குகளை பார்வையிட்டு வியந்து போனதாகவும், அங்கு அனுஷ்கா உள்ளிட்டோர் கலந்துகொண்ட படப்பிடிப்பை பார்த்து ரசித்ததாகவும், படக்குழுவினருக்கு ரஜினி வாழ்த்து தெரிவித்ததாகவும் கற்பனைக்கு எட்டியவாறு செய்திகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர்!

ஆனால் ரஜினி குறித்து மீடியாக்களில் வந்த செய்திகளில் சிறிதும் உண்மை இல்லை என்று ‘பாஹுபலி’ படத்தின் இயக்குனர் ராஜமௌலி தெரிவித்துள்ளார். ‘விக்ரமசிம்ஹா’ பட விழாவில் கலந்துகொண்ட என்னிடம் ரஜினிகாந்த் ‘பாஹுபலி’ செட்டுக்கு வர ஆசைப்படுவதாக சொன்னது உண்மைதான்! ஆனால் நேரமின்மையால் இன்னும் அவரால் ’பாஹுபலி’ செட்டுக்கு வர முடியவில்லை. அவர் எப்போது வருவார் என்பதை தான் நாங்களும் ஆவலாய் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்று கூறியிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

2.௦ மேக்கிங் வீடியோ - பார்ட் II


;