மே 1-ல் சர்ப்ரைஸ் சூர்யா!

மே 1-ல் சர்ப்ரைஸ் சூர்யா!

செய்திகள் 26-Apr-2014 12:01 PM IST VRC கருத்துக்கள்

சூர்யா, லிங்குசாமி இணைந்துள்ள ‘அஞ்சான்’ அதிரடி படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. மும்பையில் ஆரம்பித்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் கோவாவிலும் நடந்தது. ‘சிங்கம் 2’ படத்திற்கு பிறகு சூர்யா நடிக்கும் படம், லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா முதன் முதலாக நடிக்கும் படம், சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்கும் படம், சூர்யாவுடன் முதன் முதலாக சமந்தா ஜோடி சேரும் படம் என பல ஸ்பெஷல்களுடன் உருவாகி வரும் இப்படத்தின் ஒளிப்பதிவை சந்தோஷ் சிவன் கவனிக்க, யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். ‘சிங்கம் 2’ சூப்பர் ஹிட் படத்திற்கு பிறகு சூர்யா நடிக்கும் படம் என்பதால் ரசிகர்களிடத்தில் இப்படத்தின் மீது இப்போதே எக்கச்சக்க எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. கோவாவில் படப்பிடிப்பை முடித்து திரும்பியுள்ள ‘அஞ்சான்’ படக்குழுவினர் ’அஞ்சான்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை மே 1-ஆம் தேதி வெளியிட இருக்கிறார்கள்! இது குறித்து ’யுடிவி’ தனஞ்சயன் டிவீட் செய்துள்ள குறிப்பில் ‘ ‘நீங்கள் இதுவரை பார்த்திராத ஸ்டைலிஷான ஒரு சூர்யாவை இதில் பார்க்கப் போகிறீர்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்தப் படத்தை லிங்குசாமியின் ‘திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவனமும், யுடிவி நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இரும்புத்திரை ட்ரைலர்


;